MARC காட்சி

Back
திருப்புறம்பியம் சாட்சிநாதேசுவரர் கோயில்
245 : _ _ |a திருப்புறம்பியம் சாட்சிநாதேசுவரர் கோயில் -
246 : _ _ |a கல்யாண மாநகர், புன்னாகவனம்
520 : _ _ |a தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 46-வது தலம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. முதலாம் ஆதித்த சோழன் இப்பாடல் பெற்ற தலத்தை கற்றளியாக மாற்றியதாக வரலாறு. இத்தலத்திலுள்ள பிரளயங்காத்த விநாயகர் வழிபாடு சிறப்பானது. தென்முகக்கடவுளின் 24 முக்கியத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். அகத்தியர், பிரமன், சனகாதி முனிவர்கள் நால்வர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட தலம் என்பதாக தலபுராணம் கூறுகிறது. இக்கோயில் மதுரை திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதீனத்திற்கு சொந்தமானது.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், சைவம், சிவன் கோயில், திருப்புறம்பியம், சாட்சிநாதேஸ்வரர் கோயில், சாட்சிநாதேசுவரர், கரும்பன்ன சொல்லம்மை, தேவாரப் பாடல் பெற்ற தலம், காவிரி வடகரைத் தலம், சோழர், கற்றளி, முற்காலச் சோழர் கலைப்பாணி
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a +91 435 2459519, 2459715, 94446 26632, 99523 23429
905 : _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முதலாம் ஆதித்த சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். சோழர் காலக் கற்றளி.
914 : _ _ |a 11.007929703902
915 : _ _ |a 79.330884576941
918 : _ _ |a கரும்பன்ன சொல்லம்மை
922 : _ _ |a புன்னை
923 : _ _ |a பிரம்ம தீர்த்தம்.
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a ஆவணி – விநாயகர் சதுர்த்தி 5 தினங்கள் சிறப்பு வழிபாடு, மாசி மகத்தில் பிரம்மோற்சவம், கார்த்திகைத் திருநாள்
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் காணப்படுகிறார். கருவறை விமானத்தின் சுற்றுச் சுவர்களில் அமைந்துள்ள தேவகோட்டங்களில் பிட்சாடனர், கணபதி, தென்முகக்கடவுள், மகிடமர்த்தினி ஆகிய அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடிய சிற்பங்களைக் காணலாம். ஆனால் எண்ணற்ற சிற்பங்கள் பின்னப்பட்டுள்ளது. கரும்பன்ன சொல்லம்மை தனித் திருமுன் கொண்டு நின்ற நிலையில் உள்ளார்.
930 : _ _ |a அரித்துவசன் என்னும் அரசனுக்குத் துர்வாச முனிவர் சாபத்தால் ஏற்பட்ட முயலக நோய் நீங்கிய தலம். கோவிலுக்கு விறகு கொண்டுவந்த ஒரு ஏழைக்கு இறைவன் தெட்சிணாமூர்த்தி ரூபமாகத் தரிசனம் கொடுத்தார். ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெருவெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தமையால் இத்தலம் திருப்புறம்பியம் என்ற பெயரைப் பெற்றது. பிரளயம் ஏற்பட்ட போது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்திலுள்ள விநாயகர் வருண பகவானால் உருவாக்கப் பட்டவர். நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்ற் கடல் சார்ந்த பொருட்களால் விநாயகர் திருமேனியை உருவாக்கினார். இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியன்று இரவு முழுவதும் தேன் கொண்டு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யப்பெறும் தேன் யாவும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்பட்டுவிடும். வேறு நாட்களில் இந்த விநாயகருக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் வசிக்கும் வணிகன் ஒருவன் உடல்நிலை சரியில்லாத தன் மாமனைப் பார்க்க திருப்புறம்பியம் வந்தான். மாமன் இறக்கும் தருணம் தன் மகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு கண்ணை மூடினான். அவளையும் அழைத்துக் கொண்டு மதுரை செல்லுமுன் வணிகன் இத்தல ஆலயத்திற்கு வந்தான். இரவு தங்கியிருந்த போது அரவு கடித்து இறந்து விட்டான். அப்பெண் சிவபெருமானிடம் முறையிட்டாள். இறைவன் வணிகனை உயிர்ப்பித்து அவளுக்கு மணமுடித்தார். பெண்ணை கூட்டிக் கொண்டு மதுரை சென்ற வணிகன் அங்கிருந்த தன் முதல் மனைவியிடம் விபரம் கூறி வாழ்ந்து வந்தபோது வணிகனின் முதல் மனைவி, இரண்டாவது பெண்ணுடன் தன் கணவனுக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவள் மானம் கெட்டவள் என்றும் பழி கூறினாள். இரண்டாம் மனைவி திருப்புறம்பியம் இறைவனை நோக்கி முறையிட வன்னிமரம், மடைப்பள்ளி, கிணறு இவற்றோடு மதரை சென்று திருமணம் நடந்ததற்குச் சாட்சி பகன்றார். வணிகப் பெண்ணின் பொருட்டு மதுரைக்கு எழுந்தருளி சாட்சி கூறியதால் இத்தல இறைவனுக்கு சாட்சிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும் வருகிறது. மதுரை சுந்தரேசுவரர் ஆலயத்தின் ஈசான்ய மூலையில் சாட்சி கூறிய படலத்திற்குச் சான்றாக இப்போதும் வன்னிமரமும், மடைப்பள்ளியும் இருப்பதைக் காணலாம். இரத்தினவல்லி என்னும் செட்டிப்பெண்ணுக்கு இறைவன் திருமணம் நடத்தி வைத்ததற்கு சாட்சியாக இருந்த வன்னிமரம் இத்தலத்தின் இரண்டாம் திருச்சுற்றில் காணப்படுகின்றது.
932 : _ _ |a இத்திருக்கோயிலின் இராஜகோபுரம் 5 நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறது. கோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடி கொண்டுள்ளார். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றவுடன் பரந்த கிழக்கு வெளிச்சுற்று காணப்படுகிறது. அதற்கு நேரே பலிபீடம், நந்தி மண்டபம், கொடிமரம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. நந்தி மண்டபத்தின் விமானத்தில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சுதை சிற்பங்களைக் காணலாம். முதற்திருச்சுற்றில் நால்வர், அகத்தியர், புலத்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட இலிங்கங்கள் முதலியவை உள்ளன. இரண்டாம் திருச்சுற்றில் கரும்பன்ன சொல்லம்மையின் திருமுன் காணப்படுகின்றது. குளத்தின் தென்கரையில் தென்முகக்கடவுளுக்கு கோயில் உள்ளது. இதற்கு மேலே சட்டைநாதர் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது..
933 : _ _ |a இந்து சமய அறநிலையத்துறை
934 : _ _ |a திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில், கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில், திருநீலக்குடி, திருக்கோழம்பியம்
935 : _ _ |a கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மி. தொலைவிலுள்ள இன்னம்பர் திருத்தலத்தை அடுத்து அதே சாலையில் மேலும் சுமார் 3 கி.மீ. சென்றால் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 11 கி.மி. தொலைவிலுள்ள திருப்புறம்பியம் செல்ல கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
937 : _ _ |a திருப்புறம்பியம்
938 : _ _ |a கும்பகோணம்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a கும்பகோணம் வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00386
barcode : TVA_TEM_00386
book category : சைவம்
cover images TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0001.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0002.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0003.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0004.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0005.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0006.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0007.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0008.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0009.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0010.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0011.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0012.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0013.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0014.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0015.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0016.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0017.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0018.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0019.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0020.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0021.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0022.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0023.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0024.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0025.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0026.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0027.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0028.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0029.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0030.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0031.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0032.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0033.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0034.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0035.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0036.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0037.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0038.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0039.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0040.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0041.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0042.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0043.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0044.jpg

TVA_TEM_00386/TVA_TEM_00386_கும்பகோணம்_திருப்புறம்பியம்_சாட்சிநாத-சுவாமி-கோயில்-0045.jpg